குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி, ஜனவரி 6 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வௌ்ளைவான் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்றிருந்த வௌ்ளைவான் சாரதிகளுக்கு 20 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.