web log free
November 28, 2024

ஹெலி விபத்தில் நடந்தது என்ன?

10.15 மு.ப

ஹப்புத்தளை தம்பத்தனை பிரதேசத்தில் ஹெலிக்கெப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது.

10.30 மு.ப

விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான ஹெலிக்கெப்டர், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

அதன்பின்னர், நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

10.40 மு.ப

ஹப்புத்தளை தம்பப்பிள்ளை மாவத்தை பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிய ஹெலி கொப்டர், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

அந்த ஹெலிகொப்டர்  வீரவில விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

வை-12 என்ற அந்த சிறியரக விமானம் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

11.10 மு.ப

இந்த விமானம் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது என அறியமுடிகின்றது. அந்த ஹெலிகொப்டரே, தீயை பற்றிக்கொண்டு எரிந்து விழுந்துள்ளது. அதில் பயணித்த சகலரும் பலியாகியுள்ளனர் என இலங்கை விமானப்படை ஊடகப் ​பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

11.45 மு.ப

ஹெலி விபத்தில், SQUADRON LEADER வீபெத்த, LIGHT LIEUTENANT குலதுங்க, விமானப் படைவீரர் குமார மற்றும் விமானப்படைத் தலைவர் ஹெட்டியராச்சி ஆகியோரே மரணமடைந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

10.15 மு.ப

விபத்து இடம்பெற்ற போது, அந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்த பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார். அவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd