web log free
November 28, 2024

“நான் சிறைக்குச் செல்வேன்”

 

நான், நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். நான் எவ்விதமான குற்றவியல் குற்றங்களையும் புரியவில்லை. என்னை கைது செய்தால் நான், சிறைச்சாலைக்கு செல்வதற்கு தயார். நான் வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

 அது தொடர்பில் தன்னுடைய டுவிற்றர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்தப் பதிவில் “ பொலிஸாரினால் என்னுடைய வீட்டில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சோதனைக்கான நீதிமன்ற அனுமதியில், எந்த காரணத்துக்காக சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நான், எவ்விதமான குற்றவியல் குற்றங்களையும் புரியவில்லை. ஏதாவது காரத்துக்காக என்னை கைதுசெய்தால், நான், சிறைச்சாலைக்கு செல்ல தயாராகவே உள்ளேன். என்னுடைய தேகம் ஆரோக்கியமானது. நான் வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன் என்றும் அந்த டுவிற்றர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd