web log free
July 01, 2025

சிறுமியை துடுப்பாடிய 2 பெண்கள் கைது

நிக்கவரட்டிய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கிரிக்கட் துடுப்பாட்ட மட்டையால் போட்டுத்தாக்கிய இரு பெண்கள் மற்றும் நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு  நிக்கவரட்டிய மஜிஸ்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளானதை வீடியோ செய்த அயல்வீட்டுக்காரர் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று அனுப்பிவைத்துள்ளார். அதனை அந்த நிறுவனம் ஒளிபரப்பு செய்திருந்தது.

இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர், அந்த கிராமத்தின் கிராம சேவகர் என்பதுடன் தாக்குதலுக்குள்ளான சிறுமி அவரது மற்றைய பெண்ணின் கணவனின் முதலாவது தாரத்து மனைவியின் பிள்ளையென தெரியவருகின்றது.

அச்சிறுமி மீது கிராமசேவகரும் அவரது தங்கையும் இணைந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd