web log free
May 01, 2026

பசறை விபத்தில் 9 பேர் பலி

பசறை - மடுல்சீமை வீதியில்  06ஆம் கட்டை பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்​ஸே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அந்த பஸ், இரண்டு துண்டுகளாக உடைந்துவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில்,  வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த பஸ் இரண்டாக உடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Last modified on Tuesday, 07 January 2020 00:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd