web log free
June 27, 2026

சேனாவை அழிக்க பெரமோன்


சேனா படைப்புழுவை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெரமோன் உகுல் 20,000 ஐ, பிரித்தானியாவிலிருந்து இறக்குமதிச் செய்வதற்கு கமத்தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை உள்நாட்டில் பயன்படுத்துவதற்காக, எடுக்கப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகளில் நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன என, திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியு.எம்.டப்ளியு வீரகோன் தெரிவித்தார்.

இந்நிலையில், மீண்டும் அறிவிக்கும் வரையிலும் பெரும்போகத்துக்காக, சோளத்தை பயிரிடவேண்டாம் என்றும் விவசாயிகளிடம் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd