முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்ஹ சிறிசேன, ஸ்ரீ லங்கா டெலிகொம் தலைவர் பதவியை கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக, தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், முதலாவது நியமனம் அவருடைய சகோதருக்கே வழங்கப்பட்டது.
குமாரசிங்ஹ சிறிசேன, மாதாந்தம் 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்தார். புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்.