web log free
November 28, 2024

ஈரானுக்கு அதிர்ச்சி உக்ரைன் விமானம் ​விழுந்தது

ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரின் நிலை கேள்விகுறி ஆகியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில்தான் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள். விமானத்தில் பயணித்த 180 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

மீட்பய படையின் விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எத்தனை பேர் காயம் அடைந்தனர். அவர்களின் நிலை என்ன என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.

ஈரானில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க தளவாடங்களை இன்றுதான் ஈரான் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது. இதற்கு மத்தியில் ஈரானில் விமான விபத்து ஏற்பட்டடுள்ளது.

இதனால் ஈரான் அரசு கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அந்நாட்டு ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டார். அமெரிக்க படை தாக்குதலால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. இவரின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் நெரிசலில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd