web log free
November 28, 2024

மாணவி துஷ்பிரயோகம்: தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் கைது

மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் தமிழரசு கட்சியின் முக்கிய நபரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபதவிசாளாரும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நெருங்கிய சகாவுமான ரதன் என்பவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் பாடசாலை மாணவி அதிபரின் உதவியுடன் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொண்டராசிரியராக தமிழரசுக் கட்சியின் சிபாரிசில் நியமனம் பெற்ற ஆசிரியர் M.M.ரதன் அவர்களே இவ்வாறு செட்டிகுளம் பொலிஸாரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த குற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பொறுப்பற்ற அதிபரான பொன்னம்பலத்தையும் கைது செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

செட்டிகுளம் பிரதேச சிறுவர் நன்நடத்தை பிரிவினரின் முறைப்பாட்டிற்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவர் ஒரு ஆசிரியர் மட்டுமில்லாமல் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதவிசாளரும் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் ஊழலில் சிக்கி பதவி விலக்கப்பட்ட முன்னாள் வடமாகாண அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், சிறிதரன் ஆகியோரின் நெருங்கிய சகாவும் ஆவார்,

இந்த ரதன் என்னும் நபரை மீட்க, குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்க முன்னாள் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் சிறிதரன் ஆகியோர் அவரை கைது செய்ய முயற்சித்த பொலிசாரை தடுக்க பல அழுத்தங்களை கொடுத்த போதிலும் பலரும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுவரை வாக்களித்த தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகம் இழைத்து வந்த இவர்கள் வன்னியில் நிலமோசடிகள், பண மோசடிகளில் ஈடுபட்டு வந்ததுடன் தற்போது தமிழ் மாணவிகளை கற்பழிக்கவும் கற்பழிப்பவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். இதற்கு வித்தியாவின் படுகொலைக்கு உதவிய மாவையே சிறந்த உதாரணம்.

இதேவேளை ரதனின் குரு கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் ஸ்ரீதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd