கடுமையான கோபமடைந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தவர்களை கடுமையாக திட்டித்தீர்த்து விரட்டியடித்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி கோத்தாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இவ்வாறே கோரிக்கை விடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கோரிக்கையை அடுத்து கடுமையான கோபமடைந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்த சந்தர்ப்பத்தில் தான் முகம் கொடுத்திருக்குமு் பிரச்சினை நன்றாகவே போதும், இல்லாத பிரச்சினையை உருவாக்குவதற்கு நான் தயாரில்லை. அதற்கான எந்த தேவையும் எனக்கில்லை எனக் கோரி, அவர்களை ஏசி ஜனாதிபதி விரட்டிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.