web log free
February 02, 2026

ராஜித வெளியேறினார்

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து  அவர் நேற்று இரவு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது வெள்ளைவான் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த அவர், தலைமறைவாகியிருந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வந்த அவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையிலேயே வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd