முக்கிய இராஜதந்திரிகள் மூவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவர்கள் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சீன, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளே விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு இன்று வருகைதந்திருந்தனர்.
அவர்கள் மூவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே, நாட்டுக்கு வருகைதந்தனர்.
ரஷ்ய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
ரஷ்ய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சர்ஜி வெல்ரோவ், இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று (14) காலை வருகைதந்தார். அவர் தனது ததுக்குழுவில் அதிகாரிகள் 42 பேரையும் இணைத்துகொண்டுள்ளார்.
அவர்களை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
அமெரிக்க அதிகாரி வருகை
ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பிலான உதவி இராஜாங்க செயலாளர் அல்விஸ் வெல்ஸ், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை வருகைதந்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 189 ரக விமானத்திலேயே அவர், இன்று அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகைதந்தார்.
சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.
சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சென்ஸ் யீ, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் தன்னுடைய தூதுக்குழுவில் 16 பேரை இணைத்துகொண்டுள்ளார்.
அவரையும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவினரே வரவேற்றுள்ளனர்.