தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே, என்னை துரோகி என்று அழைக்க முடியும். வேறு எவராலும், என்னை துரோகி என அழைக்கமுடியாது என்று ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர், கருணா அம்மான் என்றழைக்கப்படும், முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் தேசிய வீரராக ஆவதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகுதியில்லை. அவ்வாறு உருவாகவும் முடியாது. நான் பார்த்த ஒரேயொரு தேசிய தமிழ்த் தலைவன் பிரபாகரன் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் அம்பாறை பாண்டிருப்பு ஆதரவாளர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே, கருணா அம்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டன. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் கூற்றின் ஊடாகவே அது அம்பலமாகியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மட்டுமே உரிமையுண்டு. அவரை தவிர, சுமந்திரனுக்கோ, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்விதமான உரிமையும் இல்லை.
“யுத்தக் களம் தொடர்பில் எனக்கு தெரியும்? யுத்தத்துக்கு சிறுவர்கள், பிள்ளைகளை அனுப்பும் வேதனையையும் நான் அறிந்துவைத்துள்ளன. அவர்களின் உறவினர்கள் படும் வேதனையயும் நான் நன்கறிவேன். இந்த வேலைதனைகளை அறியாதவர்களினால் தேசிய வீர்களாக ஆகமுடியாது. தேசிய தலைவர்களாகவும் வரமுடியாது என்றார்.