web log free
September 07, 2025

இராணுவத்தின் கன்னத்தில் பளார், பளார், அறைந்தவரை தேடி வலை

யாழ். வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலை 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. குறித்த பகுதியில் இராணுவ வாகனத்துக்கு வழி விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவத்தினர் நேற்று நள்ளிரவு முரண்பட்டுள்ளனர். இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது. அதிலொருவர் இராணுவத்தின் கன்னத்தை பதம் பார்த்துள்ளார் என அறியமுடிகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Saturday, 18 January 2020 02:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd