web log free
May 05, 2024

மைத்திரி அதிரடி- 20பேரை தள்ளிவைக்க முடிவு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில். முக்கியமான சில தீர்மானங்கள் அதிரடியாக எட்டப்பட்டுள்ளன.

அடுத்த பொதுத்தேர்தலில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அணியை ஆதரிப்பதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதனூடாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உட்பட 20 பேரை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் பின்னரே, அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.