web log free
December 16, 2025

யாழ். பல்கலை மாணவி கழுத்து அறுத்து படுகொலை

 

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd