web log free
November 29, 2024

மாணவியின் கழுத்தையறுத்த சிப்பாய்க்கு விளக்கமறியல்

 

தன்னுடைய மனைவியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டியில் பயிலும் மாணவி ரோஷினி காஞ்சனா (வயது 28) என்பவரின் கழுத்தையறுத்து படுகொலை செய்தாரென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவரது கணவன், பெப்ரவரி 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பரந்தன் இராணுவ முகா​மில் கடமையாற்றும் லான்ஸ் கோப்ரல் முத்துகமகே தொன் ஏரங்க திலிப் குமார (வயது 28)  என்பவர்,, யாழ் நீதவான் எஸ்.பீற்றர் போல் முன்னிலையில், நேற்று (23) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இவ்விருவரும் யாழ். பண்ணைக் கடற்கரையோரத்தில், உடற்பயிற்சி நடைபாதையில் நேற்று முன்தினம் (22) பிற்பகல் 2.30 மணியளவில் சென்றுகொண்டிருந்துள்ளனர்.  இதன்போது, இவ்விருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே, மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

மரணமடைந்த மாணவியின் மரண பரிசோதனை, நீதவானின் விசாரணைக்குப் பின்னர், யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறதுடன், ​சடலத்தை சொந்த ஊரான பேருவளைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த படுகொலை கொலை​ தொடர்பில், அவருடைய கணவனான லான்ஸ் கோப்ரல் முத்துகமகே தொன் ஏரங்க திலிப் குமார என்பவர் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென இராணுவம் அறிவித்துள்ளது.

முகாமில் கடமையிலிருந்த அந்த சிப்பாய். குறுகிய நேர விடுமுறையை எடுத்துக்கொண்டே, முகாமைலிருந்து வெளியேறியுள்ளாரென விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd