நீதிபதி கிஹான் பிலிப்பிட்டியவை கைதுசெய்யுமாறு, சட்டமா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு தன்னிச்சையான செயற்பாடெனத் தெரிவித்து, கொழும்பு நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (24) சட்டத்தரணிகளால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தால் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தை வழிநடத்துவது, ஒத்துழைப்பு வழங்குவதே சட்டமா அதிபரின் பணி என்பதோடு நீதிபதியொருவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பது சட்டமா அதிபரின் கடமையல்ல என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரித்துள்ளனர்.