புதிய அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏற்றியதன் பின்னர், யார், யாரெல்லாம் சிறைக்கு செல்கின்றார்கள் என்பது யூகிக்க முடியாதுள்ளது.
சம்பிக்க ரணவக்கவுக்குப் பின்னர், ராஜித கைதுசெய்யப்பட்டார் எனினும், சிறைக்கு செல்வில்லை. இந்நினையில், மனோ கணேசனிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ரிசாத் பதியூதீனின் சகோதரர் றிப்கான் பதியூதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவிக்கு மும்முனை போட்டியொன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பதவிக்கு புதிய அதிகாரியை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தமது திணைக்கள அதிகாரியொருவருக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே, சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்து என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக, சிறைச்சாலை திணைக்களத்தில் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் போட்டி நிலவுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவியானது, நிர்வாக சேவைக்கு உரிய பதவி என்றும், அதற்கு தமது அதிகாரியொருவரே நியமிக்கப்படவேண்டும் என, நிர்வாக சேவை அதிகாரிகளின் கருத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை புணர்வாழ்வு அமைச்சின் தகவல் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.