காங்கேசன் துறைமுகத்துக்கு 2021 ஆம் ஆண்டு நிறைவடையும் போது, பொருட்களை ஏற்றியிறக்கும் வகையிலான இறங்குதுறையொன்று நிர்மானிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் தெற்கு அபிவிருந்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இந்தியாவிடமிருந்து நிவாரண அடிப்படையில் கிடைத்த 45.27 அமெரிக்க டொலர் கடனின் கீழே, இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசமட்ட உயரதிகாரிகளுடன் எதிர்வரும் 15ஆம் திகதியன்று காங்கேசன்துறைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.