- கொரோனா வைரஸ் தாக்க அச்சம் காரணமாக விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அரசு.
- இனி பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- மறு அறிவித்தல் வரை பயணிகள் தவிர வெளியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- சீனர்களுக்கு விசேட கருமபீடம்
- சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவது இடைநிறுத்தம்.
- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்.
- அதனையடுத்தே அதிரடியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
- சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார்.
- மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.
- “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.
- சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
- சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும்.
- அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
- கொரோனாவா 071 0107107, 011 3071073 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கவும்