சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாலாயிரமாக இதுவரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் சீனத் துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்த இலங்கை மீனவர்கள் ஆறுபேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.அவர்கள் இலங்கை திரும்ப முன்னர் மருத்துவ பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி வைரஸ் தோற்றிய நிலையில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட சீனப்பெண்மணி இலங்கையில் நடமாடிய பகுதிகள் ,தங்கியிருந்த ஹோட்டல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சுகாதார அமைச்சு அப்பகுதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது .