web log free
April 07, 2026

இலங்கையிலுள்ள சகல சீனர்கள் மீதும் அவதானம்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து சீனத் தொழிலாளர்களையும் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கட்டிட மற்றும் இதர துறைகளில் சீனத் தொழிலாளர்கள் பணிபுரியும் வேலைத்தளங்களுக்கு சென்று இந்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்று இலங்கை திரும்பும் சீனப் பிரஜைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd