web log free
May 04, 2024

சீன பெண் உணவு வாங்கிய ஹோட்டல் இதுதான்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவரென அடையாளங் காணப்பட்டுள்ள சீனப் பெண், உணவு வாங்கிய ​​ஹோட்டல்களில் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேச ஓட்டலொன்றில் உணவு வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குறித்த ​ஹோட்டல், அதனை அண்மித்த பிரதேசங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த ஹோட்டலின் பணியாளர்கள், பிரதேசவாசிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக தெரிவித்தார்.

மேலும் மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேசத்தில் ​தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர், சுகாதார சேவை அதிகாரிகள் பரிசோதனைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, தம்புளை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளின் வைத்தியசாலை செயற்குழுவினரைத்  தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.