web log free
May 04, 2024

ரணில் அதிரடி: ரோஸி, சரத்,அஜித்,ரஞ்சன் நீக்கம்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடி கட்சியின் புதிய தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராயவுள்ள சூழ்நிலையில் ஏற்கனவே கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்த சஜித் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அரசியல் பிரமுகர்களை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக நீக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்படி சரத் பொன்சேகா ,அஜித் பி பெரேரா ,ரோஸி சேனாநாயக்க ,ரஞ்சன் ராமநாயக்க உட்பட்டவர்களை நீக்கி புதியவர்களை செயற்குழுவில் நியமித்துள்ளார் ரணில்.

ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கியதால் அவர் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் .

இதற்கிடையில் தலைமைத்துவ மாற்றம் குறித்து இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் வாய்ப்பில்லையென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தின் கீழ் கூட்டணி கட்சிகளை தவிர்த்து தனியே களமிறங்க ரணில் யோசனையொன்றை இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளாரென மேலும் அறியமுடிந்தது.