செல்லக் கதிர்காமம் மாணிக்கக் கங்கையில், குளித்துக்கொண்டிருந்த 34 பேரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், 34 பேருக்கும் தலா 5000 ரூபாய் வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அத்துடன்டு 34 பேரையும், ஜுன் மாதம் 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த 34 பேர் கொண்ட இளைஞர் கூட்டமொன்று, அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர், யாத்திரகர்கள் நீராடும் மாணிக்க கங்கைக்கு சென்ற அவர்கள், திடீரென்று நிர்வாணமாக நீராடுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.
இதன் பின்னர், அங்கிருந்த மற்றைய இளைஞர்கள், நாகரீகமாக நடந்துகொள்ளுமாறு எச்சரித்ததையடுத்து, எச்சரிக்கை விடுத்த இளைஞர் குழுவிலிருந்த இளைஞனர் ஒருவரை, நிர்வாணமாக குளித்தவர்கள் தாக்கியுள்ளனர்.
பின்னர், அது குழுமோதலாக மாறியதையடுத்து, நான்கு ஆண்களும் ஒரு ணெ்ணும் காயமடைந்து, கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கேள்வியுள்ள பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்தகதிர்காமம் பொலிஸார், அநாகரிகமாக நடந்துகொண்ட 34 பேரையும் கைது செய்து, நேற்று (29), பிற்பகல், திஸ்ஸமகாராமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
இதன்பின்னரே, இவர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.