web log free
May 30, 2026

பத்தனையில் 100 பேருக்கு சுகயீனம்: 3 திகதி வரை கல்லூரிக்கு பூட்டு

 

பத்தனை ஶ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கொட்டகலை, டிக்கோயா கிளங்கன் ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd