ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று எடுக்கப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், செயற்குழுவில் மொத்தமாக 67 பேர் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் 52 பேர், அக்ககூட்டத்துக்கு செல்லவில்லை. மீதமிருந்த 15 பேரைக் கொண்ட நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.