பொதுஜன ஐக்கிய முன்னணியை ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்று பெயர்மாற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுக்குழு நேற்றிரவு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி பொதுஜன ஐக்கிய முன்னணி இனிமேல் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் இயங்கவுள்ளதுடன் அதன் யாப்பையும் திருத்துவதற்கு நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இயன்ற வகையில் இந்த யாப்பு திருத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கவும் சின்னமொன்றை அறிவிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கவும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.