web log free
May 03, 2024

ரணில்-சஜித்து மீண்டும் கயிறு இழுப்பு

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவை புதிய கூட்டணியின் செயலாளர்நாயகமாக நியமிக்க சஜித் தரப்பு தீர்மானித்துள்ளது.ஆனால் ரஞ்சித் மத்துமபண்டார ,கபீர் ஹாஷிம் ,திஸ்ஸ அத்தநாயக்க ,சுஜீவ சேனசிங்க ,நளின் பண்டார ,அஜித் பி பெரேரா ஆகியோரை செயலாளர் நாயகம் பதவியில் அமர்த்த கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ரணில் தனது எதிர்ப்பை சஜித் பிரேமதாஸவிடம் தெரிவித்துளளார்.

இதேவேளை கூட்டணியின் செயலாளர் நாயகமாக ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திசாநாயக்க ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் ,எதிர்வரும் தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது பாரபட்சம் நடந்துவிடாமல் இருக்க இது உதவுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் ரணிலின் இந்த கோரிக்கையை சஜித் தரப்பு நிராகரித்துள்ளதால் இந்த விடயத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.ரணிலின் கோரிக்கையை சஜித் தரப்பு ஏற்காத பட்சத்தில் கூட்டணியில் சேரும் யோசனையை மீள்பரிசீலனை செய்யவேண்டிவருமென ரணில் கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அறியமுடிந்தது.