சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பெயர்ப்பட்டியலுக்கு அனுமதி வழங்கிய பின்னர் 512 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படுவார்கள் என, சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் பொதுமன்னிப்பு வழக்கப்படவிருப்பதாக வெளியாகிருக்கும் தகவல்கள், சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.
எவ்வாறாயினும், மனித கொலை, பெண்கள் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு இதன்போது, பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என, அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.