முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மரண தண்டனை கைதியுமான துமிந்த சில்வாவை, விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவருக்கு மிக நெருங்கிய ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே, இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், துமிந்த சில்வாவுக்கும் மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட துமிந்த சில்வா, குற்றவாளியாக இனங்காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.