web log free
May 03, 2024

பூஜித வழக்கில் மைத்திரி பிரதிவாதி

 

கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தாக்கல் செய்திருந்த அடிப்படைய உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு, உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மனுதாரர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அந்தக் கோரிக்கைக்கு அனுமதியளித்த உயர்நீதிமன்றம் மனுமீதான விசாரணையை மே மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பிவைத்து விட்டார். அது அரசியலமைப்புக்கு முரணானது. ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரம் எவையும் வழங்கப்படவில்லை.