web log free
February 02, 2026

மொட்டும் யானையும் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் அதிரடியான அறிவிப்புகளை விடுத்துள்ளன.

ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்திலே​யே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனரான ஜி.எல்.பீரிஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைத் தலைவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd