web log free
April 07, 2026

மைத்திரி புறக்கணிப்பு: ஷிரந்தியுடன் சந்திரிகா பங்கேற்றார்

கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதில், முன்னாள் ஜனாதிபதி ​சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்றுள்ளார். ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தன்னுடைய தாய், ஹேமா பிரேமதாஸவுடன் பங்கேற்றுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பங்கேற்கவில்லை.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்வில்லை.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார், ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அருகில் அமர்ந்து இருவரும் நீண்ட நேரம் எதோ பேசிக்கொண்டிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd