web log free
April 09, 2026

தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது

 

தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படு​ம் என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அதன்பிரகாரம், ​சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டது.

எனினும், அரசாங்கத்தின் மேலாதிக்கவாத வெறிக்கு எதிராக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து கொழும்பில், தேசியக் கீதத்தை தமிழ் மொழியில், இன்றுக்காலை பாடினர். அதுதொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd