கைகளை மட்டுமே பயன்படுத்தி மீன்களை பிடித்த சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கெசல்கமுவ ஓயாவிலேயே இவர்கள் இவ்வாறு மீன்களைப் பிடித்துள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், அவரியா, மணல், சுண்ணாம்பு மற்றும் பெற்றரி ஆகியவற்றை அறைத்து, வெஞ்சர் பகுதியில் வைத்து ஆற்றில் கரைத்துவிடுவர்.
அதன்பின்னர், மயக்கமடையும் மீன்கள், நீரில் மிதக்கும். அதன்பின்னரே கைகளினால் மீன்களை அவர்கள் பிடிப்பர்.
வெஞ்சரியிலிருந்து காசல் நீர்த்தேக்கத்துடன் தண்ணீர் சேரும் வரையிலும் மீன்கள் மிதந்து வந்துள்ளன. சில மீன்கள் மயங்கி நிலையில் மிதக்கும் இன்னும் சில மீன்கள் இறந்தே மிதக்கும் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.