web log free
June 27, 2026

சஜித்தின் புதிய முன்னணி: இதயமே சின்னம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமையில் உருவாகவிருக்கும் புதிய கூட்டணி தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் “எங்கள் தேசிய முன்னணி” யே பெயர் மாற்றம் செய்யப்பட்டு, “சமகி ஜன பலவேகய” எனும் பெயரில், சஜித் தலைமையில் புதியக் கூட்டணியாக பதிவு செய்யப்படவுள்ளது.

அந்த புதியக் கூட்டணியின் சின்னம், இதயமாகும்.  அதற்கான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd