web log free
May 09, 2025

தெற்கு கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி

இலங்கை படைகளுடன் இணைந்து ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்பு விமானங்கள், தென்பகுதி கடல்பரப்பில் கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி ஒத்திகையை மேற்கொண்டுள்ளன.

ஹிக்கடுவைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்தக் கூட்டு ஒத்திகை நேற்றுக்காலை ஆரம்பமானது.

இந்தக் கூட்டுப் பயிற்சி ஒத்திகையில், ஜப்பானிய கடற்படையின் பி-சி3 ரகத்தைச் சேர்ந்த இரண்டு கடல் கண்காணிப்பு விமானங்களும், இலங்கை விமானப்படையின் வை-12 கண்காணிப்பு விமானம் ஒன்றும், இலங்கை கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும் பங்கேற்கின்றன.

மேலும், இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவொன்றும் இந்த கடல் கண்காணிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd