web log free
May 03, 2024

முன்னாள் காதலை மறக்க புதிய சிகிச்சை

காதலர் தினம். உங்களை சுற்றியுள்ள பலரும் காதலை கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். சிலர் பழைய காதலை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். இதில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது.

மோசமான காதல் தோல்வி போன்ற நினைவுகளை மறக்க வைக்க ஒருவழியை கண்டறிந்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக Post- traumatic stress disorder எனப்படும் ஒரு விதமான மனநல பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்து வந்தார் மருத்துவர் அலைன் பர்னட். அதாவது ஒரு வகையான நிகழ்வால் ஒருவர் அதிர்ச்சி அடைய, அதனை தொடர்ந்து அந்த நபருக்கு ஏற்படும் மன உளைச்சல், இந்த மனநல பிரச்சனையை உண்டாக்கும்.

உதாரணமாக ராணுவ வீரர்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் அல்லது ஏதேனும் குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மனநல பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதனை காதல் தோல்விக்கும் பொருத்தி பார்த்துள்ளார் இந்த ஆய்வாளர். ஒரு மோசமான காதல் தோல்வி மிகுந்த வலி தருவதாக இருக்கும். மேற்கூறப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் வலியோடு இது ஒத்துப் போகிறது.

புதிய நினைவுகளை அறிவு சேமிக்கும்

Propranolol. மைக்ரைன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தபடும் மருந்து, தற்போது மனவலியை மறப்பதற்கும் பயன்படும் என்று அலைன் செய்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

சிகிச்சை (Therapy) செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு Propranolol-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தரும் நிகழ்வை, வலியை முழுவதுமாக எழுதி, அதனை வாய்விட்டு படிக்க வேண்டும்.

"உங்கள் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திக் கொள்ளும்போது, புதிதாக நீங்கள் கற்றுக் கொள்ள ஏதேனும் இருந்தால், அந்த பழைய நினைவுகளை மறக்க வைத்து, புதிய நினைவுகளை அறிவு சேமித்துக் கொள்ளும்" என்கிறார் கனடாவை சேர்ந்த மனநல மருத்துவரான அலைன்.

இந்த சிகிச்சை அதிக உணர்ச்சிகளை சேமித்து வைத்திருக்கும் பகுதியையே முதல் இலக்காக வைக்கும்.

இந்த சிகிச்சைக்கு பின்னர், உங்கள் நினைவுகள் அழிந்து போகாது, ஆனால், அந்த நினைவுகள் வலி ஏற்படுத்துவதை நிறுத்திவிடும்.

இந்த மாத்திரையால் உங்கள் அறிவில் புதிய நினைவுகள் சேமிக்கும். அதில் உணர்ச்சிகள் குறைந்திருக்கும்.

2015ஆம் ஆண்டில் அலைன், மாண்டிரியலில் உள்ள மெக் கில் பல்கலைக்கழகத்தின் முன்னால் முதுகலை மாணவரோடு சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தினார்.

காதல் தோல்விகள் அல்லது துரோகங்கள் ஏற்படுத்தும் மனவலி தொடர்பானதே அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் காதலில் துரோகங்களை பார்த்தவர்கள். தனது காதலன் அல்லது காதலி தன்னை விட்டு திடீரென விலகிய வலியை அனுபவித்தவர்கள்.

"இந்த நபர்கள் வாழ்க்கையில் முன்னேற போராடிக் கொண்டிருந்தனர். அதில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்" என்கிறார் அலைன் பர்னட்

அவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட பிறகு, மனவலி குறைந்து முன்பைவிட சிறப்பாக உணர்ந்தது கண்டறியப்பட்டது.

சிகிச்சையில் ஒவ்வொரு முறையும் அவர்கள் தாங்கள் எழுதியதை வாய்விட்டு படிக்கும்போது, அவர்கள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலியில் இருந்து வெளியே வருவதை பார்க்க முடிந்தது என்கிறார் அலைன்

தற்போது மாண்ட்ரியலில் உள்ள அவரது ஆய்வுக்கூடத்தில் தனது மனைவி அல்லது கணவன் தகாத உறவு வைத்திருந்ததால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.