web log free
May 09, 2025

“ராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்: 2/3 அதற்கே”

எதற்கெடுத்தாலும் இன்று அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை சுட்டிக்காட்டுகிறது அரசு. என்ன பிரச்சினை இருந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தான் அவற்றை தீர்க்க முடியாமல் இருப்பதாக அரசு கூறுகிறது.அது பொய்.திருட்டு வேலைகளை செய்யவே இந்த பெரும்பான்மை பலத்தை இவர்கள் கேட்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். 

மிக் விமானங்களை கொள்வனவு செய்வதாக உதயங்க வீரதுங்க நாட்டையும் மக்களையும் ஏமாற்றினார்.அதேபோல் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஊழல் செய்து ஏமாற்றினார்.இவர்கள் ராஜபக்சமாருக்கு நெருக்கமானவர்கள் என்றார்.

மனித நேயமுற்றவர்கள் பற்றி இன்று மைத்ரிபால சிறிசேன பேசுகிறார்.ஆனால் அவர் என்னவிதமான வகையில் மனிதநேயத்துடன் செயற்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.எங்களை அவர் ஏமாற்றினார்.சவேந்திர சில்வாவுக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டதை பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள்.ஆனால் அவருக்கு முன்னர் எனக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.அப்போது ஜெயவேவா போட்டவர்கள் இப்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அந்த பயணத் தடை குறித்து நான் எனது கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அதை ஏற்க முடியாது  என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd