web log free
May 04, 2024

நீதவானுக்கு 16 வருட கடூழிய சிறை

2013 ஆண்டு தான் விசாரணை செய்த வழக்கொன்றிற்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக கையூட்டு பெற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சுனில் அபயசிங்க என்ற நீதிபதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 300000 ரூபாய்களையும் மீளச் செலுத்துமாறும் தட்டப்பணமாக 20000 ரூபா செலுத்துமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறின் மேலுமொரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த நீதிபதி லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாகவிருந்து உதவிகளை புரிந்த அவரது பாதுகாப்பு உத்தியோகித்தரான பொலிஸ் கொஸ்தாபல் மஹிந்த கித்சிறி என்பவருக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். நீண்ட விசாரணைகளின் பின்னர், குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களுக்கப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேற்படி தண்டனை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபண்டிகே யால் வழங்கப்பட்டுள்ளது.