web log free
August 31, 2025

மிளகாய் தூள் வீரனுக்கு புதுப்பதவி

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உதவி ​கொறடாவாக, பிரசன்ன ரணவீர எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கான நியமன கடிததத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான தாரானாத் பஸ்நாயக்க மற்றும் டீ. வீ ஜானக்க ஆகிய இருவரும் மேற்படி பதவிக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் பிரசன்ன ரணவீரவும் இணைத்து கொள்ளப்பட்டிருந்தார். அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மிளகாய் தூள் வீரன் என கிண்டல் செய்யப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட்டபோது, பாராளுமன்றத்துக்குள் கடுமையான குழப்பங்களை விளைவித்தவர்களில் பிரசன்ன ரணவீர முக்கிய புள்ளி ஆவார். அவர், மிளகாய் தூளை வீசியெறிந்தார். அத்துடன் சபாநாயகரின் ஆசனத்திலும் தண்ணீர் ஊற்றி விளையாண்டார் என்பது யாவரும் தெரிந்த விடயமாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd