மாத்தளை, நாவுல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குழந்தையும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளானர். சம்பவத்தில் காயமடைந்த 49 பேர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும், சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்ட சென்ற பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை, தம்புள்ளை, நாலந்த ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தம்புள்ளையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்றும், கண்டியிலிருந்து மட்டக்களப்பு பயணித்த பஸ்ஸொன்றும் லொறியுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.


