web log free
May 30, 2026

சங்கீத ஆசிரியரிடம் “அந்த படங்கள்”

பிரபலமான மகளிர் கல்லூரியில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர் பயன்படுத்தும், பாடசாலைக்கு சொந்தமான கணினியில், நிர்வாணப் படங்கள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் உள்ள பிரதான மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் ஆண் ஆசிரியரின் கணினியில் இருந்தே இவ்வாறு படங்கள் இருந்துள்ளன. அந்த படங்களை, மாணவிகள் பலரும் பார்த்துள்ளனர் என அறியமுடிகின்றது.

ஆண் ஆசிரியரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கடுமையாக எச்சரிக்கை விடுத்த நீதவான், கடுமையான நிபந்தனைகளுடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd