web log free
May 30, 2026

வவுனியா கோரம்- தீ குறித்து விசாரணை

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில்  பஸ் ஒன்றும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதே வேளை பஸ்ஸிற்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வேன் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வேனுமே மோதியுள்ளது. 

இதன்போது அங்கிருந்தவர்களால் பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வேனுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காயமடைந்தவர்கள் அம்புயூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் பலியாகியதுடன் இருபது பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. 

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd