web log free
May 09, 2025

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இலங்கை

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஆகிய இருவரும் தங்களது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

அதன்படி, அவிஷ்க பெர்ணான்டோ 127 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 119 ஓட்டங்களையும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

திசர பெரேரா 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஷெல்டன் கோட்ரெல் 4 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd