web log free
May 09, 2025

ரஜினிக்காக எதை கொடுத்தார் நயன்தாரா

தமிழ் சினிமாவின் முடிசூடா ராணியாக திகழ்பவர் நயன்தாரா. பெண்களை மையமாக வைத்து எடுக்க பட்ட படங்களில் பாதிக்கு மேல் நயன்தாரா நடித்ததாகத் தான் இருக்கும். 

அது போல தனது சம்பளத்தை கூட்டிக் கொண்டே தான் போவாரே, தவிர குறைத்ததாக வரலாறு இல்லை. 

கடைசியாக ரஜினி நடித்த 'தர்பார்' படத்திற்காக 5.5 கோடி சம்பளம் வாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்காக 10 கோடி சம்பளம் கேட்டதாக வதந்திகள் பரவியது. 

ஆனால் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இந்த வதந்திகளை மறுத்துவிட்டனர். அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக தர்பார் படத்திற்க்கு வாங்கிய சம்பளத்திற்கு 20 சதவீதம் குறைவாகத்தான் இந்த படத்திற்கு கேட்டுள்ளார் என தெரிவித்தனர்.

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் குஷ்பூ, மீனா, சூரி மற்றும் சதீஷ் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd