எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் போனால், தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல்கள் ஆணைக்குழுவில் தலைவர் என்ற ரீதியில், ஆணைக்குழுவினரிடம் இது தொடர்பில் கதை
க்கவில்லை, அதிகாரிகளிடமும் எது குடும்பத்தாரிடம் கூட இதனைக் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலை முன்னதாக நடத்தினால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
எனினும், நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை என்றால் நான் எனது பதவியை இராஜினாமா செய்வேன்.
தேர்தலை நடத்தாமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இராஜினாமா செய்வேன். நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது போனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை நான் இராஜினாமா செய்துவிடுவேன்.
ஆணைக்குழுவில் இருப்பேன். தலைவர் பதவியை மாத்திரமே துறப்பேன். தேர்தலை ஒத்திவைப்பது மற்றும் அதனை நடத்த தபமதிப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய என்ற குடிமகனின் மனசாட்சியும் வலிக்கின்றது.
தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
சில அரசியல் கட்சிகள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே தேர்தலை நடத்தவுள்ளதாக கூறுகின்றனர். ஒவ்வொருவரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த தேசப்பிரிய இங்கே அமர்ந்திருக்க போவதில்லை.