web log free
May 04, 2024

மஹிந்தவின் கோட்டையில் நடந்த அட்டூழியம்

 இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வெளிநாட்டு தம்பதியை மைதானத்தை விட்டே வெளியேற வைத்த வைத்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டியை பார்ப்பதற்கும் இலங்கை அணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்கு வந்த வெளிநாட்டு இளம் தம்பதியிடம் இலங்கையர் ஒருவர் மோசமாக செயற்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண் தனது உடலின் மீது இலங்கையின் தேசிய கொடியை போர்த்தியிருந்தார். எனினும் குடிபோதையில் அவ்விடத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதுடன் அந்த கொடியை அகற்ற முயற்சித்துள்ளார்.

எனினும் தங்களை விடுமாறு கண்ணீருடன் குறித்த வெளிநாட்டு பெண் கூறிய போதிலும் இலங்கையர் தொந்தரவு செய்துள்ளார். இதனால் குறித்த தம்பதி அச்சத்துடன் மைதானத்தை விட்டே வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில், இதனை பார்த்தவர்கள் அனைவரும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு இலங்கையர்கள் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளர்.

“இந்த பதிவை தவறியேனும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அன்று நடந்த சம்பவத்திற்கு வெட்கமடைகின்றோம். அனைத்து இலங்கையர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என பலர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சில நபர்களின் செயற்பாடு இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த பகுதியான ஹம்பாந்தோட்டையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Tuesday, 03 March 2020 11:23